சிவகார்த்திகேயனுக்கு தலையில் என்ன பிரச்சினை? தலையில் குல்லா போட்ட காரணம்
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அனைத்து இடங்களுக்கும் குல்லா அணிந்து கொண்டு வரும் நிலையில், இதற்கான காரணத்தை நேற்றைய தினத்தில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
விடாமுயற்சி மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை உண்மையாக்கி இன்று சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தை வென்றார். இவரது கலகலப்பான பேச்சுக்கு, தொகுப்பாளர் பணி கிடைத்தது.
இதனை கெட்டியாக பிடித்து கொண்ட சிவகார்த்திகேயன், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடன திறமையையும் அசால்டாக வெளிப்படுத்தி டைட்டிலை வென்றார்.
3 படத்தில் தனுஷுக்கு நண்பராக காமெடி ரோலில் நடித்த சிவா, பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012ம் வெளியான மெரினா படம் மூலம் ஹீரோவாக மாறினார்.
இவரின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்த படங்களை நடித்து வருகின்றார்.
குல்லா அணிவது எதற்காக?
தற்போது மாவீரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில், எங்கு சென்றாலும் தலையில் குல்லா அணிந்து வருகின்றார். இதனால் ரசிகர்கள் தலையில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு விளக்கம் கொடுத்த சிவகார்த்திகேயன், அடுத்த படமான SK 21 படத்திற்கான கெட்டப்பில் இருப்பதால், இதனை வெளியே காட்டக்கூடாது என்று படக்குழு போட்ட கண்டிஷன் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் 'எவ்வளவு வெயில் அடித்தாலும் இதை மாட்டிக்கொண்டு சுத்த வேண்டி இருக்கு' என சிவகார்த்திகேயன் காமெடியாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |