குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிறாரா நடிகர் SK! எந்த நாட்டில் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் அஜித், மாதவனை தொடர்ந்து துபாயில் சொகுசு வீடு வாங்கியுள்ளதாகவும் குடும்பத்துடன் அங்கு செட்டில் ஆகப்போவதாகவும் ஒரு செய்தி இணையத்தில் கசிந்து தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன்
மேடை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி தமிழ் சினிமா துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் தான் சிவகார்த்திகேயன்.

இவர் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.
தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.

இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அமரன் படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து மதராசி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருப்பதாகவும் குடும்பத்துடன் அங்கே செட்டில் ஆக போவதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |