நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்திகேயன்!
ஜப்பானில் நெப்பொலியன் மகன் தனுஷின் திருமணம் நடைபெற்றது. இதற்கு சிவகார்த்திகேயன் நெப்பொலியனிடம் வீடியோ ஒன்றின் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் நெப்போலியனின் மகனுக்கு ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சிவகார்த்திகேயனால் கலந்துகொள்ள முடியாதத்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நெப்போலியன் தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க, சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு கடைசியில் தனது மகனின் விருப்பப்படி அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறினார்.
இந்த நிலையில் தற்போது நெப்போலியனிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அந்த வீடியோவில் "நெப்போலியன் சார், நீங்கள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர், எனது கடினமான காலங்களில் நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள்.
இந்த திருமணத்தின் போது நான் பல பொறுப்புகளை கையாள வேண்டியிருந்தது, அதற்காக, நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
நான் செய்வேன். விரைவில் உங்கள் அனைவரையும் வந்து சந்திப்பேன் என்று நம்புகிறேன், தனுஷ், உங்கள் திருமணத்திற்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |