ஆர்த்திக்கும்.. சங்கீதா விஜய்க்கும் இடையே இப்படி ஒரு நெருங்கிய நட்பு இருக்கா? வெளியான தகவல்
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், மிமிக்ரி கலைஞராக பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.
தொகுப்பாளரான சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அது இது எது நிகழ்ச்சிதான் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களை உருவாக்கி தந்தது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு இவரை தேடி வந்தது. தற்போது கடினமாக உழைத்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ படம் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘மாவீரன்’ படம் பார்க்க வந்த சங்கீதா
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தை பார்ப்பதற்காக நடிகர் விஜய் மனைவி சங்கீதா சென்னையில் உள்ள ‘வெற்றி’ திரையரங்கிற்கு வந்த விஷயம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியல் இறங்கி சில பணிகளை செய்து வருகிறார்.
ஆனால், சமீப காலமாக விஜய் தன் மனைவியுடன் வெளியிடங்களுக்கு செல்வது இல்லையென்றும், இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் என்றும், விரைவில் விவாகரத்து பெறப்போகிறார்கள் என்றும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
அப்படி ஒன்றும் அவர்கள் இருவருக்குள்ளும் இல்லை என்று விஜய் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதெல்லாம் வதந்தி என்றும், சங்கீதா குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை திரும்பிய சங்கிதா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்தை பார்ப்பதற்காக முகத்தில் மாஸ் அணிந்து வந்தார். தியேட்டரில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியை சந்தித்த சங்கீதா, அவரின் கையை பிடித்துக்கொண்டு ரொம்ப நேரமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |