குடும்ப மானத்தை காப்பாற்ற தான் சினிமாவை விட்டு விலகினேன்! ரகசியங்களை கேமராவின் முன் உடைத்த சிவாஜின் பேரன்
சிவாஜி கணேசனின் பேரன் துஸ்யந்த ராம்குமார் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றிக்கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்து, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி கொடுத்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவாஜி கணேசனின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் பல கோடி உள்ளங்களை வென்று 80 களில் வெற்றி வாடகை சூடிக் கொண்டவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இவர் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். இவரின் நடிப்பிற்கு யாரும் வரவில்லை.
மேலும் தற்போது இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் இவரை ட்ரோல் செய்து தான் நடிக்கிறார்களே தவிர யாரும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கவில்லை.
இதனை தொடர்ந்து இவரின் மகன் பிரபுவும் சினிமாவில் இன்றும் பிரபல்யமடைந்த நடிகர் தான். இதன்படி, பிரபு சமிபத்தில் வெளியான 'வாரிசு" திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை தொடர்ந்து இவரின் குடும்பத்தில் விக்ரம் பிரபு இவரும் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக தான் திகழ்ந்து வருகிறார்.
அடுத்த தலைமுறை பயணம்
இவரின் யதார்த்தமான நடிப்பால் “ கும்கி” படத்திலே பலக் கோடி ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து “மணிரத்னம்” இயக்கத்தில் பிரமாண்ட செலவில் உருவான “பொன்னியின் செல்வன்” திரைபடத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து வரும் ஒவ்வொரு தலைமுறை வாரிசுகளும் சினிமாவில் பெரிய தலைகளாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் ஒரு நடிகர் தான் ஆனால் இவர் மிகக்குறைவான படங்களில் தான் நடித்துள்ளார்.
இவருக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி மற்றும் இடங்கள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இவரின் மகன் “துஷ்யந்த் ராம்குமார்” ஒரு நடிகரான தான் இருந்து வருகிறார். ஆனால் இவருக்கும் விக்ரம் பிரபுவிற்கு கிடைத்த இடம் கிடைக்கவில்லை. இதனை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மிகவும் வருத்தமாக கூறியிருந்தார்.
பேட்டியில் வெளிவந்த சில இரகசியங்கள்
இந்த பேட்டியில், கல்லூரி படிப்பை முடித்து விட்டு நான் நடிக்க வந்து விட்டேன். அப்போது “சக்சஸ்” என்ற திரைப்படம் நடித்தேன். அப்போது தான் சினிமாவில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என தெரிந்தது. இந்த திரைப்படம் வெற்றியடையவில்லை. இதனால் அதிகமான விமர்சனங்கள் குடும்பத்தை தாக்கியது.
இதனை தொடர்ந்து, “மச்சி” என்ற திரைப்படம் நடித்தேன். அந்த படம் வெற்றியடைந்தாலும் சரியாக நடிக்கவில்லையோ என்ற பயம் இருந்துக் கொண்டே இருந்தது. இதனால், ஏண்டா! இந்த உலகத்தில் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது.
சிறிதுக்காலம் சென்றும் புதிய படம் பண்ணுவதற்கு, ரஜினிகாந்த் அழைத்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தேன்.
அதுவும் முறையாக நடக்கவில்லை. இதனை தொடர்ந்து ஒரு கமலை சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அவர் தாத்தாவின் பெயரையும், சித்தப்பாவின் பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது எனக் கூறினார். அப்போது சினிமாவை கற்றுக் கொள்ள முடிவு செய்தேன்.” என கூறியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.