அந்தக் காலத்திலேயே லேடி கெட்டப்பில் நடித்த நடிகர் திலகம்... அச்சு அசல் பெண் போலவே இருக்கும் அரிய புகைப்படம்
அந்தக் காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெண் வேடமிட்டு நடித்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிவாஜி கணேசன்
தற்போது சினிமாவில் எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் யாரையும் அடித்துக் கொள்ள முடியாத அளவிற்கு திரைத்துறையில் பெரும் சாதனைப் படைத்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இவரின் முதல் திரைப்படம் பராசக்தி தான். இந்த திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமாக பலரின் மனதை வென்றார். அதற்குப் பின்னர் பல வேடங்களில் நடித்து கதாப்பாத்திரமான வாழ்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இவரின் நடிப்பு சினிமாவில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்து 280 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். இவருடைய நடிப்புக்கு இன்னும் யாரும் நிகராக இருந்ததில்லை. இவருக்கு எல்லா நாடுகளிலும் இப்போதும் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சினிமாவில் பல வேடங்களில் நடித்து இன்றும் நடிகர் திலகமாய் ஜொலிக்கும் சிவாஜி கணேசன் அந்தக் காலத்திலேயே பெண் வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் அவர் அச்சு அசல் பெண்போலவே இருக்கிறார்.
இவரின் அந்தப் புகைப்படம் பல ஆண்டுகள் கழித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |