மதுரை முத்துவை துடைப்ப கட்டையை எடுத்து அடிச்சிடுவேன் என்ற ஷிவாங்கி... தாறுமாறாக கிழிக்கும் நெட்டிசன்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மதுரை முத்துவை ஷிவாங்கி துடைப்பக் கட்டையால் அடிச்சிடுவேன் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசனைப் போன்று இந்நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
தற்போது இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா, ரித்திகா, பவித்ரா ஆகியோர் வெளியேறியுள்ளார்கள்.
இந்த சீசனில் மதுரை முத்து வெளியேறினாலும் அடிக்கடி இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றார். அவ்வாறு அஸ்வினுடன் ஷிவாங்கி சமைத்துக்கொண்டிருக்கும் போது மதுரை முத்து சிவாங்கியைப் பார்த்து சில வார்த்தைகளைப் பேசினார். இதற்கு ஷிவாங்கி துடைப்பக் கட்டையால் அடிச்சிடுவேன் என்று கூறியதும் மதுரை முத்து சற்று முகம் சுளித்துள்ளார். பின்பு கொமடி நிலைக்கு திரும்பினார்.
இதைக் கண்ட ரசிகர்கள் என்னதான் ஷிவாங்கி குக்கு வித் கோமாளியின் செல்லப் பிள்ளை என்றாலும் கொஞ்சம் பாத்து பேச வேண்டும் என்பது தான் பலரின் அட்வைஸாக இருந்து வந்தது. இந்நிலையில் ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் மக்களுக்கு எப்போதும் ஏதாவது குறை சொல்ல ஒன்று எப்போதும் அது தான் வாழ்க்கை என்று பதிவிட்டுள்ளார்.
ஷிவாங்கியின் இந்த பதிவை பார்த்த பலரும், இதனை ஷிவாங்கி மதுரை முத்து குறித்து எழுந்த சர்ச்சைக்காக தான் போட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டு ஷிவாங்கிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
#karuthukanammalite#quoteoftheday pic.twitter.com/QTNa0PjWoG
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) March 18, 2021