உடல் எடையை குறைத்து ஒல்லியான ஷிவாங்கி! அதுவும் எத்தனை கிலோ தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி உடல் எடையை குறைத்து படு ஒல்லியாக மாறியிருக்கிறார்.
சூப்பர் சிங்கரில் அறிமுகமானாலும், ஷிவாங்கிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை தேடித்தந்தது என்றால் அது குக் வித் கோமாளி தான்.
புகழுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்யும் கலாட்டாக்களை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது, வெள்ளந்தியான பேச்சால் அனைவரையும் ஈர்த்துவிடுகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாவில், 2015 மற்றும் 2022ம் ஆண்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உடல் எடையை குறைத்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
65 கிலோவிலிருந்து 55 கிலோவாக எடையை குறைத்துள்ளதாகவும், இன்னும் எடையை குறைக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உங்களை பொறுத்தவரை எது நன்றாக இருக்கு? எனவும் செல்லமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
