செல்லமே.. தங்கமே! சேலையில் ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
செல்லப்பிள்ளை ஷிவாங்கி
இவரது குழந்தைதனமான பேச்சாலும், வசீகரிக்கும் குரலாலும் பலரது மனங்களிலும் இடம்பிடித்தார், ஏன் பலரது வீட்டின் செல்லப்பிள்ளையாகவும் வலம்வந்தார்.
பாடல் மட்டுமல்ல, தன்னால் நகைச்சுவையாலும் அசத்த முடியும் என ஷிவாங்கி நிரூபித்தது என்றால் அது குக்வித் கோமாளி தான்.
அந்நிகழ்ச்சியில் இவரது கோமாளித்தனத்தை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது, அதுவும் அண்ணன்- தங்கை என இவரும் புகழும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.

இப்படி தன்னுடைய கேரியரை முன்னேற்றிக்கொண்டே சென்ற ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் படத்திலும் நடித்து பெரியதிரைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
சேலையில் வசீகரிக்கும் அழகு
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில் கலர்புல்லான சேலையில் ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பலரும் செல்லம் பெருசா வளர்ந்துட்டாங்களே... ஓ மை காட் என பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.