அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் சிவாங்கி.. அவரே போட்ட பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்
சிவாங்கி அடுத்தடுத்து கொடுக்கும் ஷாக் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.
போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி.
பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.
இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.
அடுத்த அப்டேட்
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, அடுத்தடுத்து கொடுக்கும் அப்டேட் இணையவாசிகளை வாய் அடைக்க வைத்துள்ளது.
அதாவது சிவாங்கியின் ரீல்ஸ் காணொளிகளை மாத்திரம் பார்ப்பதற்கு புதிய யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்துள்ளார்.
இந்த காணொளியை பார்த்த சிவாங்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |