மாணவிகளிடம் அத்துமீறிய பாபாவா இது? மொட்டை தலையுடன் வீல் சேரில்- வைரலாகும் புகைப்படம்
டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நெஷ்னல் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் பலர் சிவசங்கர் பாபா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பாலியல் ரீதியாக மாணவிகளை துன்புறுத்தி வந்த பாபாவுக்கு எதிராக ஆதாரங்களும் குவிந்தன.
இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்பாக தாமாக முன் வந்து பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவையும் கடந்த 11ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக சம்மன் அனுப்பியது.

எனினும் அவர் ஆஜர் ஆகாத காரணத்தினால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் இருப்பதாக அறிந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்றனர்.
அங்கு இல்லாததால் டெல்லி சித்தரஞ்சன் பூங்கா அருகே உள்ள ஒரு ஓட்டலில் டெல்லி போலீசார் உதவியுடன் சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர்.
உடனடியாக டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 நாள் ட்ரான்ஸ்ட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மொட்டை தலையுடன் ஆளே மாறி, சிவசங்கர் பாபா தப்பிக்க முயற்சிகள் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.