சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு திடீர் மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு வன்புணர்வு தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில் சிவசங்கர் பாபா தேடப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அவரை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர் மாணவிகளிடம் தவறாக பேசிய வீடியோ மற்றும் ஆடியோவும் வைரலானது மட்டுமின்றி, மாணவிகளிடம் இவர் தவறாக பேசிய ஆதாரங்கள் வெளியானது.
டேராடூனில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை முடிந்த பின்பு டெல்லிக்கு தப்பிஒடினார்.
இந்நிலையில் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர், 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென இவர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவர் உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் பெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.