சிவகார்த்திகேயன் வீட்டில் விஷேசம்.. மனைவிக்கு கொடுத்த சப்ரைஸ்! ஆனந்தத்தில் பொங்கிய ஆர்த்தி
நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி இருவரும் நேற்றைய தினம் அவர்களின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் கோலிவுட்டிற்கு 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் “மெரீனா” என்ற படத்தில் கதாநாயகராக நடித்தார்.
இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மனைவிக்கு கொடுத்த சப்ரைஸ்
இவர்களுக்கு திருமணம் முடிந்து சரியாக 13 ஆண்டுகள் ஆகின்றது. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவகார்த்திகேயன் திருமண நாளை மனைவிக்கு பதிவு போட்டு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இந்த பதிவு கண்டிப்பாக ஆர்த்திக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - ஆர்த்திக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |