இலங்கை - அசோகவனத்தில் பத்தினி தெய்வமாக அருள் பாலிக்கும் சீதை!
நாம் அனைவரும் இராமயணம் பற்றி தெரிந்திருப்போம். அதோடு தொடர்புடைய ஒரு இடம் இலங்கையில் உள்ளது என்பது கணிசமானோருக்கு தெரிந்த உண்மை.
அந்த வகையில் சீதை, இராம பகவானைப் பிரிந்து தவக்கோலத்தில் வாழ்ந்த இடம் தான் அசோகவனம்.
இந்த இடம் இலங்கையில் காணப்படுகிறது மற்றும் இந்த இடத்திலுள்ள கோவிலுக்கு “ஆதிசக்தி சீதையம்மன் கோயில்” என பெயர் சூட்டபட்டு அசோக வனத்தின் தெய்வமாக வணங்கப்படுகிறது.
சீதாஎலியா கோவிலின் அமைவிடம்
இலங்கையின் மத்திய மாகாணத்தில், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த இடம் இங்கிலாந்து நாட்டவரால் `சின்ன இங்கிலாந்து’ எனும் பெயலில் அழைக்கப்படுகிறது.
இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அடர்ந்த வனமும் தேயிலைத் தோட்டமும் நிறைந்து இடத்தில் காணப்படுகிறது.
“அசோகவனம்” எனும் பெயருக்கு ஏற்ப வனம் முழுவதும் அசோக மரங்களாக நிறைந்து காணப்படுகிறது. இங்குதான் ராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டாள்.
அன்று இரவணனால் சிறை வைக்கபட்ட சீதையே இன்று பத்தினி தெய்வமாக வழிப்படபடுகிறாள். இந்த கோயிலை உள்ளூரில் “ஆதிசக்தி சீதையம்மன் கோயில்” என்றும், சிங்கள மக்களால் ‘நுவரெலியா சீதாஎலியா’ என்றும் அழைக்கபடுகிறது.
சீதாஎலியா கோயிலின் சிறப்பம்சம்
அசோக வனத்தில், அசோக மரத்தின் அடியில் சீதா தேவி தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் சீதை தேவிக்கென்றே பிரத்தியேகமாகக் கோயில் கட்டபட்டுள்ளது.
இங்கு அனுமனுக்கு தனிச் சந்நிதி உண்டு மற்றும் இங்கு நடைபெறும் பூஜைகள் அனைத்தும் சீதா தேவிக்கே சென்றடைய வேண்டும் என்பது ஐதீகம்.
சீதையம்மன் கோயில் அடர்ந்த வனத்தில் மலைச் சரிவில் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழியில் வழியெங்கும் சிவப்பு நிறப்பூக்கள் காணப்படும்.
இந்த கோயிலில் இராமர், லட்சுமணன் மற்றும் சீதை தேவி ஆகியோரின் விஸ்வரூப மூர்த்தங்களை வணங்கும் கோலத்தில் அனுமன் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்று காணப்படும்.
கோயில் மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இந்த கோயிலில் இரண்டு சந்நிதிகள் காணப்படுகின்றன. அனுமனிடம் சீதா தேவி கணையாழியைப் பெறுகிற காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது.
அந்தச் சிலைக்குக் கீழே ஆற்றங்கரையில் காணப்படும் பாறைகளில் காலடி போன்ற இரண்டு பெரும் பள்ளங்கள் காணப்படுகிறது. அந்த காலடிகள் அனுமானுடையது என பக்தர்களால் நம்பபடுகிறது.
அதுமட்டுமின்றி அதற்கு அருகிலுள்ள பாறைகளில் காணப்படும் பள்ளங்கள் சீதாதேவியின் கண்ணீர் தேங்கியவதற்கு உருவானது என்றும் நம்பபடுகிறது. இந்த கோவிலில் வழிப்பாடு செய்தோமானால் அனைத்து குறைகளும் நீங்கும் என்பதும் பக்தர்களால் நம்புகிறார்கள்.
இதுவே இக்கோவிலின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.