இதை உங்களால் செய்ய முடியவில்லையா? அப்போ 5 வருடத்தில் இறக்கும் அபாயம் இருக்கிறதாம்
நாம் எவ்வளவு ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கிறோம் என்பதை அறிய பலருக்கும் விருப்பம் இருக்கும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே பலருடைய விருப்பமாகவும் இருக்கும். ஆரோக்கியம் என்பது வயதானவர்கள் மட்டுமன்றி இளைஞர்களும் கூட வலிமை, ஆரோக்கியத்தை இழக்கின்றனர். அதை கண்டறிய சிலர் ஓடுதல் அல்லது புஷ்-அப் எடுப்பதை செய்வார்கள். ஆனால் இது சரியான முறை இல்லை என்கின்றனர் வல்லுநர்கள்.
SRT என்பது ஒரு sit and rise test சோதனை. உடலின் தசை வலிமை, மூட்டு சேர்க்கை, உடல் சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை சோதிக்க தரையில் உட்கார்ந்து எழ வேண்டும். இது உடல் சுறுசுறுப்பைத் தீர்மானிக்க உதவும் எளிய வகை சோதனை. உங்கள் உடல் வலிமை, சமநிலை, ஒருங்கிணைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தும் நோ-ஹேண்ட் டெஸ்ட் என்றும் அல்லது SRT டெஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
SRT யார் யாரெல்லாம் செய்யலாம்..?
இந்த சோதனையில் மற்றவர்களின் உதவியை நாடாமல் உட்கார்ந்து எழுந்து நிற்பதாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஒருவரின் கூற்றுப்படி, இந்த சோதனை அனைவருக்கும் பொதுவானது இல்லை. முழங்கால் வலி, மூட்டுவலி, மோசமான சமநிலை அல்லது ஏதேனும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் என உடல் நிலை சிகிச்சைப் பெறுபவர்கள், மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்த சோதனை பொருந்தாது.
SRT செய்முறை :
தரையில் உட்காருங்கள். உங்கள் கால்களை குறுக்காக அல்லது நேராக வைத்து அப்படியே எழவும்.
எதிலும் சாயாமல், முழங்கால்கள், முழங்கைகள், தொடைகள் மற்றும் கைகளால் எதையும் தொடாமல் மீண்டும் உட்காரவும்.
இப்போது எந்த உதவியும் இல்லாமல் மீண்டும் எழுந்து நிற்கவும்.
இதை சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் சற்று கடினமான பயிற்சிதான். இதை செய்யும்போது அருகில் உதவிக்கு யாரையேனும் வைத்துக்கொள்வது நல்லது.
முடிவை எவ்வாறு தீர்மானிப்பது?
பின் வரும் இந்த 2 கேள்விகளை மனதில் வைத்துக்கொண்டு முடிவை தீர்மானிக்கவும்.
அந்த பயிற்சியை செய்யும்போது உங்கள் கைகள் அல்லது முழங்கால்களைப் பயன்படுத்தினீர்களா?
உங்களால் எழுந்திருக்க முடிந்ததா இல்லையா?
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து ஆம் என்னில் ஒவ்வொன்றுக்கும் ஒரு புள்ளியை குறையுங்கள். 10க்கு எவ்வளவு என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
உங்கள் கைகளைப் பயன்படுத்தினீர்கள்
உங்கள் முழங்கால்களைப் பயன்படுத்தினீர்கள்
உங்கள் முன்கையைப் பயன்படுத்தினீர்கள்
முழங்கால் அல்லது தொடையில் கையில் பயன்படுத்தினீர்கள்
உங்கள் காலின் பக்கத்தைப் பயன்படுத்தினீர்கள்
ஒரு கட்டத்தில் சமநிலை இழந்தீர்கள்
எந்த அசௌகரியமும் இல்லாமல் அமர்ந்திருந்தாலும், எழுந்திருக்க கை அல்லது முழங்காலைப் பயன்படுத்தினீர்கள்
உங்கள் இரு கைகளையும் முழங்கால்களையும் பயன்படுத்தி எழுந்தீர்கள்.
முடிவு :
நீங்கள் எந்த உதவியும் அல்லது ஆதரவும் இல்லாமல் உட்கார்ந்து எழுந்திருந்தால், நீங்கள் 10 மதிப்பெண் பெற்றீர்கள். இருப்பினும், உங்களால் எழுந்திருக்க முடியவில்லை என்றால், நீங்கள் பூஜ்ஜிய புள்ளிகளைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் மூன்று அல்லது அதற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இறக்கும் ஆபத்து ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
நீங்கள் குறைந்த புள்ளிகளைப் பெற்றிருந்தால், மருத்துவர் அல்லது சான்றளிக்கப்பட்ட உடற்பயிற்சியாளர் அல்லது பிசியோதெரபிஸ்ட்டின் உதவியுடன் உங்கள் உடல் மற்றும் வலிமையில் கவனம் செலுத்துங்கள். தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உடல் பலவீனத்தை வெற்றி அடையலாம்.