உடல்நலகுறைவால் உயிரிழந்த சகோதரர்.. ராக்கி கயிறு கட்டி கதறிய சகோதரிகள்! சோக சம்பவம்
இந்தியா முழுவதும் முழுவதும் சகோதரத்துவம் கொண்டாடப்படும் வகையில் ரக்ஷா பந்தன் தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது.
இதனை முன்னிட்டு பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி ஆசிகளை பெற்று கொண்டனர்.
பலரும் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்தனர்.
இதனையடுத்து, தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் மடகுலபள்ளி மண்டல் நகரின் மலாகுடெம் கிராமத்தில் வசித்து வந்தவர் சிந்தப்பள்ளி லட்சுமையா( 50).
இவருக்கு 5 சகோதரிகள் உள்ளனர். இதனிடையே, உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த லட்சுமையா திடீரென உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். லட்சுமையாவின் 5 சகோதரிகளும், உடல்நல குறைவால் உயிரிழந்த தங்களது சகோதரரின் கையில் ராக்கி கயிறு கண்ணீர் விட்டனர்.
இதனை கண்ட சுற்றியிருந்த கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.