தங்கையை அழ வைத்து வேடிக்கைப் பார்க்கும் அக்கா: இணையத்தில் வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ
பொதுவாகவே ஒரு வீட்டில் அக்கா, தங்கை என்று இருந்தால் கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துக் கொண்டே தான் இருக்கும்.
என்னதான் எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டாலும் எதாவது பிரச்சினை வந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அப்படி இரு அக்கா-தங்கையின் பாசத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றுதான் இது.
இந்த வீடியோவில், ஒரு குட்டிக் குழந்தை கட்டிலில் படுத்து கொண்டிருந்த வேளையில், அவரின் அக்கா பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு அழுததைப் போல நடிக்கிறார்.
ஆனால் அந்தக் குழந்தை அக்கா உண்மையாக அழுவதாக நினைத்து தானும் அழுகிறார். பிறகு அக்கா சிரிக்க ஆரம்பிக்க அந்தக் குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |