அக்காவின் திருமணத்தில் நடனமாடிய இளம்பெண்... சரிந்து விழுந்து உயிரிழந்த பகீர் காட்சி
தனது சகோதரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் சரிந்துவிழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இளம்வயதினருக்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படும் நிலையில், தற்போது அவ்வாறான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரியின் திருமணத்தில் ஹல்டி விழாவில் ரிம்ஷா என்ற 18 வயது இளம்பெண் நடமாடியுள்ளார்.
அப்பொழுது சில வினாடிகளுக்கு பின்பு நெஞ்சுவலி ஏற்பட்டது போன்று அவரது செயல் இருக்கின்றது. பின்பு சிறுவன் ஒருவனின் கையைப் பிடித்து அப்படியே சரிந்து விழுகின்றார்.
பின்பு குறித்த இளம்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். குறித்த காட்சி இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
UP : मेरठ में बहन के हल्दी प्रोग्राम में डांस कर रही रिमशा नामक युवती की मौत हुई। डॉक्टर इसे हार्ट अटैक बता रहे हैं। pic.twitter.com/FXa2cIzEh4
— Sachin Gupta (@SachinGuptaUP) April 28, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |