அக்காவிடம் மாட்டிக்கொண்டு துடிதுடித்து உயிரிழந்த 5 வயது சிறுவன்: பகீர் சம்பவம்
ஐந்து வயது தம்பியை 20 வயது அக்கா ஒருவர் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங்குளத்தூரை சேர்ந்தவர்கள் தியாகராஜன், சூசைமேரி தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் இருக்கின்றனர்.
இருவரும் கூலி வேலைக்கு சென்று வருவதால், தனது ஐந்து வயது மகனை கவனிக்க முடியாமல் தனது சகோதரியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 4 மாதங்களாக சிறுவன் அங்கு வளர்ந்துவந்த நிலையில், சூசை மேரியின் சகோதரியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்துவிடவே அவரது மகள் மேரி(20) குறித்த சிறுவனை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவன் மயக்கமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக மேரி சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மருத்துவமனையில் சிறுவை பரிசோதித்த மருத்துவர் அவன் இறந்துவிட்டதாக கூறியதுடன், சிறுவன் உடம்பில் தீ காயங்களும், பிரம்பால் அடித்த தடமும் இருந்ததால் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்த பொலிசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததோடு, அக்கா மேரியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், 4 மாதங்களாக சிறுவனை கொடுமை செய்ததையும், வெளியே கூறினால் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடுவதாகவும் மிரட்டியுள்ளதை கூறியுள்ளார். சிறுவன் அதிகம் குறும்புத்தனம் செய்ததால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
கடந்த 16ம் தேதி அன்று இரவு 8 மணிக்கு எப்போதும்போல் சிறுவனை அடித்து தாக்கியநிலையில், மயங்கிய சிறுவன் பின்பு எழுந்திருக்காததால், மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
தற்போது குறித்த பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அளவிற்கு சித்ரவதை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
