தம்பியை தலைகீழாக தொங்கவிட்ட அக்கா! பின்னணியில் பகீர் சம்பவம்
தமிழகத்தில் சொத்துக்காக தங்கையே தனது அண்ணனைக் கடத்தி சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணனை கடத்திய தங்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியில் வசித்து வருபவர் வேலுச்சாமி (56). இவர் தனது மனைவி அம்பிகா மற்றும் 2 மகன்களுடன் குடியிருந்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் வேலுச்சாமியின் மனைவி அம்பிகா மற்றும் அவரது தம்பி தங்கதுரை ஆகியோருக்கு இடையே சொத்து பிரச்சினை நிலுவையில் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி தங்கதுரையை காரில் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. ஆனால் அங்கிருந்து தப்பிய தங்கதுறை பல்லடம் காவல்நிலையத்தினுள் தஞ்சம் அடைந்துள்ளார்.
விசாரணையில், வேலுச்சாமி மற்றும் மகன் இருவரும் தங்கதுரையை கடத்திச் சென்று தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்துள்ளதாகவும், பின்பு பெங்களூருக்கு அழைத்து சென்று போதை மறுவாழ்வு மையத்தில்விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு தங்கதுரையின் அக்கா, அதாவது வேலுச்சாமியின் மனைவியும் துணையாக இருந்துள்ளார். சொந்த தாய்மாமனையே தந்தையின் உதவியுடன் கடத்திய கோகுல் மற்றும் அவரது தந்தை வேலுச்சாமி இருவர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.