சிறுத்தை படத்தில் நடித்த அந்த குழந்தை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தியின் மகளாக நடித்த அந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சிறுத்தை
கார்த்தி, தமன்னா மற்றும் சந்தானம் நடிப்பில் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியானப் படம் சிறுத்தை.
இப்படத்தை சிவா இயக்கியிருந்தார்.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படமானது 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விக்ரமகுடு என்ற படத்தின் ரீமேக் தான். தமிழில் கதாநாயகனாக நடித்த கார்தியின் மகளாக ஒரு சிறய குழந்தை நடித்திருந்தார்.
சிறுத்தை படத்தின் குழந்தை நட்சத்திரம்
அந்த படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில், 'ஆராரோ ஆராரிராரோ' என்ற தாலாட்டு பாடல் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்தவர் தான் ரக்ஷனா.
அவர் தற்போது வளர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரக்ஷனா, தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் கார்த்தியின் சிறுத்தை படத்தில் மட்டுமின்றி மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி மற்றும் விஷாலின் நடிப்பில் வெளிவந்த பாண்டியா நாடு உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |