Siragadikka Aasai: வில்லத்தனத்தை ஆரம்பித்த சிந்தாமணி... பணத்தை பறிகொடுத்த மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி மீனாவின் பணத்தை ரவுடிகளை விட்டு பறித்துச் செல்வதற்கு கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் கூறிய பொய்களில் ஒன்றான மலேசியா மாமா அம்பலமாகியுள்ளது. இதனால் விஜயா ரோகினி மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றார்.
இதனால் அவரை கொடுமைப்படுத்துவதுடன், மனோஜிடம் நெருங்கவிடாமலும் இருக்கின்றார். மீனா அடுத்த ஆர்டருக்கு பணத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத விஜயா, உடனே சிந்தாமணிக்கு போன் செய்து விடயத்தை கூறியுள்ளார். சிந்தாமணி மீனாவிடமிருந்த பணத்தை அடிப்பதற்கு இரண்டு பேரை ஏற்பாடு செய்துள்ளார்.
அவர்களும் இருசக்கர வாகனத்தில் வந்து மீனாவின் பணத்தை பறித்துக் கொண்டு செல்கின்றார். என்னதான் பிடிக்காத மருமகளாக இருந்தாலும் இப்படியா வில்லத்தனம் செய்வது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
