Siragadikka Aasai: மீனாவை விழுந்து விழுந்து கவனிக்கும் விஜயா... இந்த திடீர் மாற்றம் ஏன்?
சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதும் மீனாவை குறைசொல்லிக் கொண்டே இருக்கும் விஜயா தற்போது அவரை தங்கம் செல்லம் என கொஞ்சும் ப்ரொமோ வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியை கைது செய்து சென்ற போலிசார், முத்து மீனாவின் பேச்சைக் கேட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த ரோகினியை விஜயா எச்சரிக்கும் நிலையில், அண்ணாமலையும் விஜயாவினை எச்சரிக்கின்றார்.
இதனால் விஜயா திடீரென மனம் மாறியுள்ளார். தான் நல்ல விடயங்களை செய்து டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்று கூறி, அதற்கான வேலையினை செய்துள்ளார்.
மீனாவைக் கொஞ்சிய விஜயா
மீனா திருமணம், க்ரிஷ் வருகை என அனைத்தையும் பெருமையாகி கூறிய விஜயாவிடம், டாக்டர் பட்டம் பெறுவதற்கு ஏதாவது ஆதாரம் வேண்டும் என்று பெண் கூறியுள்ளார்.
அதாவது இனி செய்யும் நல்ல விடயங்களை எல்லாம் காணொளியாக எடுத்து வர கூறியதால், வீட்டிற்கு வந்த விஜயா மீனாவை தங்கம் என்று அழைத்து புதிய புடவை ஒன்றினை கொடுக்கின்றார்.
பின்பு மீனாவை மட்டுமின்றி க்ரிஷையும் கொஞ்சுகின்றார். வீட்டில் உள்ள அனைவரும் இதனை நம்பமுடியாமல் பேரதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |