Siragadikka Aasai: அங்கே என்னடா பார்க்குற? இனிமேல் அவகிட்ட பேசக்கூடாது...
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியிடம் மனோஜை விஜயா பேசக்கூடாது என்று கோபமாக பேசியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியா மாமா உண்மை பூதாகரமாக வெடித்துள்ளது.
வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட ரோகினி தற்போது மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார். பாட்டி வீட்டிற்கு வந்து சமாதானப்படுத்தி வைத்துள்ளார்.
ஆனாலும் கோபம் அடங்காமல் இருக்கும் விஜயா மனோஜிடம் ரோகினியுடன் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ரோகினியை இனிமேல் ஷோரூமிற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
ரோகினிக்கு தேவையான உணவை இனிமேல் ரோகினியே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளதையடுத்து, மீனா, ஸ்ருதி இருவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
