Siragadikka Aasai: மனோஜிடம் அழுது ஆர்பாட்டம் செய்த விஜயா! ரோகினி என்ன செய்யப் போகிறார்?
சிறகடிக்க ஆசை மனோஜ் தன்னை எதிர்த்துப் பேசியதற்காக விஜயா அழுது ஆர்ப்பாட்டம் செய்து அனுதாபத்தை சம்பாதிக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றார்..
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி கூறிய பொய்யில் மலேசியா மாமா குறித்த உண்மை அம்பலமாகிய நிலையில், விஜயா ரோகினியை மனோஜிடம் இருந்து பிரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
அவ்வப்போது சிந்தாமணியுடன் சேர்ந்து கொண்டு மீனாவிற்கும் குடைச்சல் கொடுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ரோகினி பக்கம் தனது கோபத்தை திருப்பியுள்ளார்.
அதாவது ரோகினியை மனோஜிடம் வெறுப்படைய வைப்பதற்கு திட்டமிட்ட விஜயாவிற்கு திடீரென ஆப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ரோகினியை விஜயா சத்தம் போட்ட போது மனோஜ் விஜயாவை எதிர்த்து பேசியுள்ளார்.
இதனால் விஜயா அழுது ஆர்பாட்டம் செய்து மனோஜிடம் சீன் போட்டு வருகின்றார். ரோகினியின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |