Siragadikka Aasai: வழக்கை வாபஸ் பெற சம்மதித்த விஜயா... ஆனால் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் வழக்கறிஞரை முத்து மற்றும் மீனா சந்தித்துள்ள நிலையில், அண்ணாமலை விஜயாவிடம் வந்து பேசி வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
சிட்டியுடன் கூட்டு சதி செய்து சத்யாவின் காணொளியினை வெளியிட்ட ரோகினி, அடுத்து மீண்டும் சிட்டியிடம் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட தனது அம்மாவை மீனா ஒருவழியாக வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், மாமனாரிடம் பேசியுள்ளார்.
அவர் விஜயாவிடம் சென்று பேசிய போது, வழக்கை திரும்ப பெறுவதாக கூறிவிட்டு, தனது கண்டிஷனையும் கூறியுள்ளார்.
இதற்கிடையே சிட்டி அந்த பிஏ-வுடன் கூட்டு சேர்ந்து ரோகினியை மிரட்டி பணம் கேட்டு வருகின்றார். ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்க பெரிய தப்பு செய்த ரோகினி அதிலிருந்து மீளாமல் மீண்டும் சிக்கலில் செல்வது பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |