Siragadikka Aasai: மனோஜை பிரிய மறுக்கும் ரோகினி.... கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மனோஜை விட்டுச் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துள்ள நிலையில், ஆனால் எதையும் கண்டுகொள்ளாத விஜயா கழுத்தை பிடித்து தள்ளி வெளியேற்றியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைந்து வாழ்ந்து வரும் நிலையில், அதில் மலேசியா மாமா குறித்த உண்மை மட்டும் தற்போது அம்பலமாகியுள்ளது.
மீனா வீட்டில் என்னதான் மாமியாரால் கொடுமை அனுபவித்தாலும், சிறந்த மருமகளாக அனைவரையும் அனுசரித்து செல்கின்றார்.
வீட்டிற்கு வந்த கறிக்கடை மாமா ரோகினி குறித்த உண்மையை உடைத்துள்ளார். இதனல் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஜயா அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் மனோஜை விட்டுச் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த நிலையில், விஜயா தனது சுயரூபத்தைக் காட்டி வெளியே அனுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
