Siragadikka Aasai: க்ரிஷ் என் பையன் டா... அம்பலமாகிய பல வருட உண்மை! மாஸ் காட்டிய முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மொத்த குடும்பத்தையும் அழைத்து உண்மையை கூறுவதற்கு தயாரான நிலையில், ரோகினி அதிர்ச்சியில் இருக்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி குறித்த உண்மை முத்துவிற்கு தெரியவந்துள்ளது. அதாவது ரோகினியின் உண்மை ஏற்கனவே மீனாவிற்கு தெரிந்த நிலையில், தற்போது முத்துவும் இதனை அறிந்துள்ளார்.
முத்து ரோகினியின் முதல் கணவரின் உறவினரை சந்தித்த நிலையில், அவர்கள் மூலமாக இந்த எதிர்பாராத உண்மை அவருக்கு தெரியவந்துள்ளது.

இன்றைய எபிசோடில், க்ரிஷை தத்து கொடுக்க மனோஜ் அவனுக்கு அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை என்று கூறினார். முத்து க்ரிஷிற்கு அம்மா இருப்பது உண்மை... ஆனால் அவள் புருஷன் இறந்த பின்பு தவறான வழியில் சென்றுவிட்டார் என்று திரும்ப திரும்ப கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ரோகினிக்கு கோபம் உச்சத்திற்கு செல்லவே நான் தான் டா க்ரிஷின் அம்மா என்ற உண்மையை ரோகினி அனைவரது முன்னிலையும் உடைத்துள்ளார்.
முத்து தனது தந்தையிடம் தான் ஒரு பெண்ணை பற்றி தவறாக கூறியது தப்புதான் மன்னித்து கொள்ளுங்கள் என்று அண்ணாமலையிடம் கெஞ்சுகின்றார். மேலும் ரோகினியிடம் இருந்து உண்மையை வரவழைக்கவே இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |