Siragadika Aasai: காசுக்காக பாட்டி பக்கம் சாய்ந்த ரோகினி, மனோஜ்- முத்துவின் பரிசு இதுவா?
மீனாவின் நகையை விற்றுவிட்டு, அதனை சமாளிப்பதற்காக விஜயா, மனோஜ் இருவரும் பாட்டி பக்கம் பேச ஆரம்பித்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாட்டி பக்கம் பேச ஆரம்பித்த விஜயா
இந்த நிலையில், மீனாவிற்கு ஒரு சங்கிலி வாங்குவதற்காக மீனாவிற்கு பாட்டிக் கொடுத்த நகைகளை அண்ணாமலையிடம் முத்து கேட்கிறார்.
அப்போது மனோஜிற்காக மீனாவின் நகைகளை கொடுத்த விஜயா கவரின் நகைகளை அண்ணாமலையிடம் மாற்றிக் கொடுக்கிறார். அந்த நகையை விற்க செல்லும் போது கடைக்காரர்களிடம் முத்து - மீனா வசமாக சிக்கிக் கொள்கிறார்கள்.
இதனை தொடர்ந்து விஜயாவும் மனோஜும் நகையை விற்றுவிட்டு அதனை மறைக்க கவரின் நகைகளை வாங்கிக் கொடுத்து விட்டு பாட்டியின் பக்கம் சாய்ந்து பேச ஆரம்பித்துள்ளனர்.
பாட்டியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வாங்கலாம் என தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த விடயம் அண்ணாமலைக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |