Siragadikka Aasai: போலிஸிடமே வேலையைக் காட்டிய மனோஜ்... அதிரடியாக கைது செய்யப்பட்ட தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீதேவா வெளியிட்டுள்ள காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் ஸ்ரீதேவா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் ஸ்ரீதேவா. இவர் இந்த சீரியலில் ரோகினியின் கணவராக நடித்து வருகின்றார்.
அதாவது அளவுக்கு அதிகமாக படித்துவிட்டு, முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பது, மற்றவர்களிடம் ஏமாறுவது இதுதான் இவரின் வேலையாக இருக்கின்றது.

இவரது மனைவி ரோகினி ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு அம்மா என்பதை தெரியாமல் அவளுடன் வாழ்ந்து வருகின்றார். ஆனால் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக தனது நடிப்புத்திறமையினை வெளிக்காட்டி வருகின்றார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது. அதாவது தான் குடியிருக்கும் தெருவில் போலிஸ் வாகனம் வந்து நின்றுள்ளது.
இதனை விசாரிக்க சென்ற நிலையில், அவரை போலிசார் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியே ஆகும். இதனை அவதானித்த ரசிகர்கள் இவை ஷுட்டிங் காணொளி என்பது மிகவும் நன்றாகவே தெரிகின்றது என்று கூறியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |