அத சொல்ல எனக்கு உரிமை இல்ல.. பொங்கி எழுந்த ரோகிணி அம்மா- தத்தெடுப்பார்களா?
“ உன் மகன்னு நான் தான் சொன்ன தான் தெரியும்..” என ரோகிணி அம்மா ரோகிணியை மிரட்டியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கீரிஷை தத்தெடுக்கும் முடிவில் முத்து
இந்த நிலையில் மீனா - முத்து இருவரும் கீரஷை பார்ப்பதற்காக சில பொருட்களை வாங்கி கொண்டு ரோகிணி ஊருக்கு செல்கிறார்.
அப்போது முத்துவும் மீனாவும் ரோகிணியின் அம்மா நிலைமை பார்த்து விட்டு கீரிஷை தத்தெடுக்கும் முடிவுக்கு வருகிறார். இந்த விடயத்தை அவர்கள் சென்ற பின்னர் ரோகிணி அம்மா ரோகிணியிடம் கூறுகிறார்.
இதனை கேட்ட கடும் கோபமான ரோகிணி, “ ஏ புள்ள விடயத்தில் நான் தான் முடிவெடுக்கணும். அவே அங்கையே இருக்கட்டும்..” என மிரட்டும் வகையில் பேசுகிறார்.
இதனை கேட்டு கடுப்பான அம்மா, “ யாருக்கும் அவன் உன் மகன் என்று தெரியாது அது நினைவில் வைத்துக்கொள். அவன் விஷயத்தில் முடிவெடுக்கிற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு.. என பேசுகிறார்.
இந்த எபிசோட்டை பார்க்கும் போது முத்து மீனாவிடம் கிருஷை தத்து கொடுத்து விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ் வீட்டிற்கு வந்த பிறகு தான் ரோகிணி ஏதாவது ஒரு சூழ்நிலையில் தன்னை பற்றி உண்மைகளை வீட்டில் சொல்வார் என்று ரோகிணி ஒரு பக்கம் பயந்து கொண்டிருக்கிறார்.
இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது. நாளை எபிசோட்டில் ரோகிணி கிரிஷ் விடயத்தை மாற்றி விஜயாவிடம் போட்டுக் கொடுக்கிறார். இதனால் கடுப்பான விஜயா முத்து - மீனாவிற்கு எதிராக என்ன செய்ய போகிறார் என்பதனை பொருமையாக இருந்து பார்ப்போம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |