வீட்டை விட்டு வெளியேறும் ரோகிணி.. கண்டுக்கொள்ளாத மனோஜ்- பிரிந்து விடுவார்களா?
விஜயாவிடம் பலமாக அறை வாங்கிய ரோகிணி வீட்டை விட்டு செல்லும் முடிவுக்கு வந்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி- மனோஜ் இருவரும் பிளான் போட்டு முன்னாள் காதலியான ஜீவா திருடிய பணத்தை வட்டியுடன் திருப்பி வாங்கியுள்ளனர்.
அந்த பணத்தை வைத்து மனோஜ்க்கு கடைப்போட்டு கொடுக்கிறார். இருவரும் இணைந்து சந்தோஷமாக இருக்கும் பொழுது பணம் திரும்ப கிடைத்த விடயம் முத்துவின் காதுகளுக்கு வருகிறது.
இதனை வீட்டிலுள்ளவர்கள் முன் அனைத்தை உண்மைகளையும் உடைக்கிறார். இதனால் கடுப்பான விஜயா, பணம் விடயத்தில் ஏமாற்றிய ரோகிணியை பளார் பளார் என அறைகிறார்.
வீட்டை விட்டு வெளியேறும் ரோகிணி
இந்த நிலையில் இது குறித்து விசாரித்த போது, “அவர் எங்கையும் வேலைக்கு போகாம இருந்தாரு. வேலை செஞ்சா முதலாளியா தான் செய்வேன்னு சொன்னாரு. அதான் எனக்கு வேற வழி தெரியல. இல்லைனா இன்னும் அவர் பார்க்கல தான் உக்காந்திருப்பாரு” என்று சொல்கிறார்.
இதனை தொடர்ந்து, “அந்த காசை எங்க கிட்ட குடுத்திருந்தா நாங்க அதுக்கு வழி பண்ணிருக்க மாட்டோமா? என்று விஜயா கேட்க,“இதுவரைக்கும் எதுவுமே பண்ணலையே ஆண்டி..” என ரோகிணி சொல்ல மீண்டும் கோபப்பட்டு ரோகிணியை அறைகிறார். பின் அண்ணாமலை விஜயாவை தடுத்து நிறுத்துகிறார்.
சண்டை முடிந்து வந்த ரோகிணி “ மனோஜுக்கு படிப்பு இருந்தா மட்டும் போதுமா அதை வச்சு எதுவுமே செய்ய மாட்டுறாரு..” என்கிறார். இதனை கேட்ட விஜயா,“ அப்போ என் பையனுக்கு திறமை இல்லைனு சொல்லுறியா?” என கேட்கிறார்.
“திறமைலா இருக்கு. அதை எப்படி யூஸ் பண்ணனும்னுதான் தெரியல..” என ரோகிணி அனைத்தையும் போட்டுடைக்கிறார்.
அப்போது ரோகிணி மனோஜை பார்க்க மனோஜ் சற்றும் கண்டுக்கொள்ளாமல் மூஞ்சை திருப்பிக் கொள்கிறார். தனக்காக மனோஜ் வந்து நிற்கவில்லையே, பேசவில்லையே என்று ரோகிணிக்கு கவலை அதிகமாகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |