ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த முத்து- ஏமாந்த மனோஜ்- ஸ்ருதியால் வந்த வினை
முத்துவை குடிக்க வைத்த பின்னர் அவருடைய செல்போனை எடுத்து விடலாம் என ரோகிணி புதிய திட்டம் போடுகிறார்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தோல்வியடைந்த ரோகிணி
இந்த நிலையில், மனோஜ்- ரோகிணி இருவரும் திருமண நாளை வைத்து எப்படி வியாபாரத்தை இரட்டிப்பாக்கலாம் என பிளான் போடுகிறார். அவர்களின் பிளானின் படி வீட்டிலுள்ள அனைவரையும் பெரிய பணக்காரர்கள் போல் நடிக்க வைக்கிறார்கள்.
அப்போது ரவியை பார்த்து,“ நீங்க எப்படி இந்த இளம் வயதில் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு உரிமையாளரானீர்கள்?” என கேட்க, அதற்கு ஸ்ருதி, “ சமையல்காரராக இருந்து தான்..” என பதில் கொடுத்து மொத்த பிளானையும் சொதப்பி விடுகிறார்.
அந்த சமயம் பார்த்து முத்து- மீனாவிடம் ரோகிணி, “நான் உங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுக்கிறேன்..” என் கூறுகிறார். அதற்கு முத்து,“வேண்டாம்” என்கிறார்.
இதனால் ரோகிணியும் அவருடைய நண்பி கடுப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவழியாக பல திட்டங்களை போட்டு போனை எடுத்து விடுகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |