குழந்தையோடு வந்த மருமகள்.. கண்கலங்கியப்படி சொன்ன வார்த்தை- ரியாஷ்கான் ஏற்றுக் கொண்டாரா?
“குழந்தையோடு எப்படி ஏத்துப்பாங்கன்னு பயந்தேன்..” என ரியாஷ்கான் மருமகள் பேசியது இணையவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரியாஸ்கான்
இர்பான் போல் நடிகர் அஜித் செய்த விடயம்: அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு... வைரலாகும் மருத்துவரின் காணொளி
தமிழ் சினிமா பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் ரியாஸ்கான்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
ரியாஸ்கான் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடிப்பார். தற்போது ரியாஸ்கான் படங்களில் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை உமா- ரியாஸ்கான் மகன் சாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
மாமனார் இப்படியெல்லாம் செய்வார்..
இது குறித்து முதல் முறையாக பேசிய மரியா, “ நானும் என் மகளும் தனியாக வாழ்ந்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்பவர் என் மகளை பார்த்துக் கொள்வாரா? என்ற கேள்வி என் மனதில் இருந்தது. அந்த கேள்விக்கு சிறந்த பதிலாக சாரிக் இருந்தார். என் மகளை அவருடைய மகள் போல் பார்த்து கொள்கிறார்.
அவருடைய பெற்றோர்களும் என மகளை அவர்களுடைய பேத்தியாக பார்க்கிறார்கள். என் மாமனார் ஷீட்டிங்கில் இருந்தாலும் என மகள் குறித்து விசாரித்து விடுவார். நான் இவ்வளவு நாட்களாக தனிமையில் இருந்ததற்கு இதுவொரு வரமாக பார்க்கிறேன்..” என பேசினார்.
மனைவி குறித்து பேசிய சாரிக்
சாரிக் கூறிய போதும், “என் அப்பா, அம்மாவை பற்றித்தான் முதலில் யோசித்தேன். நான் மாரியா பற்றி விஷயத்தை சொன்னதும் யோசித்தார்கள், பின்னர் ஜாரா வீட்டிற்கு வந்ததும் அவர்களின் மனம் மாறி விட்டது. ஊர் ஆயிரம் பேசினாலும் நமது சந்தோஷம் தான் முக்கியம் என திருமணம் செய்து வைத்தார்கள். என் பொண்டாட்டி, என் மகள் அவ்வளவு தான்..” என கூறினார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள்,“மரியாவின் மனைவிக்கு இது இரண்டாவது திருமணமா?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
வீடியோ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |