அம்பலமாகும் ரோகிணி பற்றிய உண்மை.. மொத்தமாக போட்டுடைத்த முத்து- விஜயா எடுத்த அதிரடி முடிவு
ரோகிணி திருமணம் செய்த உண்மையை முத்து கண்டுபிடித்து விஜயாவிடம் கூறி விடுகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல்
Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா- கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜயாவின் கொடூரமான முடிவு
இந்த நிலையில் ரோகிணி பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியில் வர ஆரம்பித்துள்ளது. முத்து- மீனா இருவருக்கும் ரோகிணி ஏதையோ மறைக்கிறார் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திட்டம் போட்டு கிரிஷ் மற்றும் ரோகிணியின் அம்மா பற்றி விசாரிக்கிறார்கள்.
அப்போது கிரிஷ் கல்யாணியின் மகன் என்றும் அவருக்கு வயதான ஒருவருடன் திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது என்பதும் தெரியவருகிறது.
இவற்றை தெரிந்து கொண்ட முத்து விஜயாவிடம் கூறியது போலவும், விஜயா- மனோஜ் இருவரும் ரோகிணியை அடித்து வீட்டை விட்டு துரத்துவது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அப்படி உண்மைகள் வெளிவந்தால் ரோகிணியின் நிலை குறித்து ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |