மனதுக்குள் குமுறும் அருண்.. சூழ்ச்சியை முறியடித்த முத்து- மீண்டும் சேர்ந்த குடும்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவால் பிரிந்து போன அக்கா- தங்கை இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "சிறகடிக்க ஆசை”. இந்த சீரியலில் திருப்பங்களுக்கு பஞ்சமே இருக்காது.
சாதாரண குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விடயங்களை எடுத்துக் காட்டும் விதமாக எடுக்கப்படும் இந்த சீரியலில் முத்துவை விட ரோகிணி மிக முக்கியமான கதாபாத்திரம்.
ஏற்கனவே திருமணமாகி தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதை மறந்து, தனக்கானவொரு வாழ்க்கை வேண்டும் என்பதற்காக மனோஜை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

க்ரிஷை வளர்க்க முடியாமல் ரோகிணியின் அம்மா பல வழிகளில் கெஞ்சி போராடி பார்க்கிறார். ஆனாலும் ரோகிணி மனம் இறங்கி உண்மைகளை அவருடைய வீட்டில் கூறுவது போன்று இல்லை.
ஆதாரங்களை காட்டிய முத்து
இந்த நிலையில் சீதா முத்து பேச்சை கேட்காமல் அருணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நாளுக்கு நாள் வீட்டில் புது பிரச்சினை வெடித்துக் கொண்டே இருக்கிறது. சீதா அவர் வேலைச் செய்யும் மருத்துவமனையில் இருந்து பணத்தை திருடி விட்டார் என அவர் மீது வீண் பலியை போட, அதனை கண்டுபிடித்து முத்து சீதாவை அந்த பலியில் இருந்து வெளியில் கொண்டு வருகிறார்.

அருணுக்காக மீனா- முத்துவிடம் பேசாமல் போன சீதாவுக்கு நல்ல துணையாக இருந்து உதவிச் செய்வதை விட்டு விட்டு, சீதாவை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என அருண் முயற்சி செய்தார். அதையும் முத்து இல்லாமலாக்கியதால் கடுப்பில் என்ன செய்வது என தெரியாமல் நின்றுக் கொண்டிருக்கிறார்.
வீட்டிலுள்ளவர்களின் உண்மையான முகத்தை புரிந்து கொண்ட சீதா அம்மா, அக்காவிடம் மன்னிப்பு கேட்கிறார். அவர்களும் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |