Siragadikka Aasai: மாஸ்க் அணிந்து வீடியோ அழைப்பில் வந்த ரோகினி... சந்தேகத்தில் அண்ணாமலை
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷின் பெற்றோர் ஆசிரியர் கூடுகைக்கு ரோகினி மாஸ்க் அணிந்து கொண்டு வீடியோகாலில் வந்து பேசியுள்ளது அண்ணாமலைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
இருவரும் கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் கதைகளமாகவும், கொடுமைக்கு மத்தியில் மாமியாருக்கு மருமகளாகவும் கதை செல்கின்றது.
சரியாக படிக்காத இவர்களின் அடுத்தடுத்த முன்னேற்றத்தை பார்த்து உடன்பிறந்த அண்ணனே பொறாமையில் பொங்கி வருகின்றார்.
ரோகினியின் மகன் படிக்கும் பள்ளியில் அண்ணாமலை வேலை செய்து வரும் நிலையில், தற்போது பெற்றோர் ஆசிரியர் கூடுகை நடைபெற்றுள்ளது.
இதில் ரோகினி வழக்கம் போல் தப்பித்துக் கொள்வதற்கு மாஸ்க் அணிந்து வீடியோ காலில் வந்து பேசியுள்ளார்.
இவ்வாறு மாஸ்க் போட்டு வீடியோ காலில் வந்துள்ளது அண்ணாமலைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் திருமணம் செய்திருக்கும் ரோகினி குறித்த உண்மையை கண்டுபிடிக்க மீனா முத்து முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே முத்து போலீஸ்காரர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது க்ரிஷை சந்தித்துள்ள மீனா மற்றும் முத்து அவரது பாட்டியையும் பார்த்து பேசியுள்ளனர்.
இதில் ஒரு கட்டத்தில் மீனா க்ரிஷின் பெற்றோர்கள் உங்களது அண்ணனும், அந்த ஜீவாவும் தான் பகீரளிக்கும் விடயத்தை முத்துவிடம் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |