Siragadikka Aasai: விஜயாவை அடிக்க பாய்ந்த அண்ணாமலை... வீட்டில் நடந்தது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி தனது உடம்பில் க்ரிஷ் அம்மாவின் ஆவி வந்துள்ளதாக கூறி மனோஜை பயமுறுத்தியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சீரியல் ஆகும். இதில் அடுத்தடுத்து பல உண்மைகள் வெளியாகியுள்ளது.
அதாவது மீனா மற்றும் முத்து இவர்களை சுற்றி கதைகளம் சென்று கொண்டிருக்கின்றது. மாமியார் விஜயா கொடுமை செய்து வந்தாலும் மீனா அதனை பொருட்படுத்தாமல், தனது வேலையினை செய்து வருகின்றார்.

சமீபத்தில் மீனாவிற்கு ரோகினி குறித்த அனைத்து உண்மையும் தெரிந்த நிலையில், இதனை வீட்டில் சொல்ல விடாமல் ரோகினி அவரை மிரட்டி காரியத்தினை சாதித்து வருகின்றார்.
இந்நிலையில் ரோகினி தனது மகன் க்ரிஷை ஒரு வழியாக மீனாவை வைத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்ததுடன், அதன் பின்பு என்ன செய்யப் போற என்று மீனா கேள்வி எழுப்புகின்றார்.
அப்பொழுது மீனா கூறியதை தனக்கு சாதகமாக ரோகினி பயன்படுத்திக் கொண்டு தான் கல்யாணி... க்ரிஷ் அம்மாவின் ஆவி... ரோகினி உடம்பில் வந்திருக்கேன் என்று கூறி மனோஜை பயமுறுத்தியுள்ளார்.
மேலும் க்ரிஷை பார்த்துக் கொள்வதற்காக ரோகினி இவ்வாறு செய்துள்ளார். நாளுக்கு நாள் இவரது பித்தலாட்டம் அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில், இதற்கு எப்பொழுது முற்றுப்புள்ளி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |