Siragadikka Aasai: முத்துவின் கார் விபத்து... மீனாவின் பூக்கடை! ரோகிணியின் அடுத்த உண்மை அம்பலம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி முத்து, மீனாவிற்கு செய்த பல துரோகங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பல ஆண்டுகளாக ரோகினி மறைத்து வைத்திருந்த உண்மை தற்போது முத்துவால் அம்பலமாகியுள்ளது.
விஜயா மற்றும் மனோஜ் இருவரும் ரோகினியை வீட்டைவிட்டு துரத்திய நிலையில், தற்போது சிந்தாமணியின் வீட்டில் வசித்து வருகின்றார்.

முதல் திருமணம் மற்றும் குழந்தை ஆகிய உண்மைகள் தெரிந்த நிலையில், முத்துவின் கார் விபத்தில் சிக்கியது, மீனாவின் பூக்கடையை காலி செய்தது என அனைத்தையும் ரோகினி செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
அண்ணாமலைக்கு ரோகினி மீது சற்று இரக்கம் இருந்த நிலையில், இந்த உண்மைகள் அறிந்த பின்பு இனிமேல் ரோகினி இந்த வீட்டு மருமகள் கிடையாது என்று அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.
விஜயா ரோகினியை போலிசில் புகார் அளித்து கைது செய்ய வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து அண்ணாமலை இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும் மீனாவின் தோழிகள் வழியில் ரோகினியை சந்தித்து சரமாரியாக திட்டித் தீர்த்துள்ளனர். நாளுக்கு நாள் முத்து, மீனா மீதுள்ள வன்மம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்து ரோகினியின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |