Siragadikka Aasai: சொந்த கடையில் பணத்தை திருடிய ரோகினி! மனோஜிடம் மாட்டிக் கொள்வாரா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் க்ரிஷ் இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த பிஏ ரோகினியை மிரட்டி பணம் கேட்கின்றார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரோகினி புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
அதாவது மனோஜின் கடை தற்போது பயங்கரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், லாக்கரில் 3 லட்சம் ரூபாயையும் வைத்துள்ளார்.
இத்தருணத்தில் முத்து க்ரிஷுடன் ஐஸ்கிரீம் சாப்பிடும் போதும், பிஏ அவர்களைப் பார்ததுவிட்டு க்ரிஷ் குறித்த உண்மையை கூறிவிடுவதாக மிரட்டுகின்றார்.
பின்பு தனக்கு இரண்டு லட்சம் பணம் வேண்டும். இல்லையெனில் முத்துவிடம் இதனை சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகின்றார்.
அப்பொழுது ரோகினி கடையில் மனோஜ் வைத்திருந்த பணத்தினை எடுத்துக்கொண்டு எஷ்கேப் ஆகின்றார்.
ரோகினி எடுத்த பணத்தின் பழி புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கணவன் மனைவி மீது விழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |