Siragadikka Aasai: கழுத்தை பிடித்து வெளியேற்றப்பட்ட ரோகினி... மீனாவையும் மாட்டிவிட்ட தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து ரோகினியின் உண்மையை வெளிக்கொண்டு வந்த நிலையில், விஜயா அவரை வெளியே அனுப்பியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி குறித்த உண்மை முத்துவிற்கு தெரியவந்த நிலையில் இதனை குடும்பத்தினர் முன்பு அம்பலப்படுத்த முத்து நேற்று சரியான நாடகம் ஒன்றினை போட்டுள்ளார்.
அதாவது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த முத்து க்ரிஷின் அம்மா ஒழுக்கமில்லாமல் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறி ரோகினியை கோபத்தில் கொந்தளிக்க வைத்தார்.

ரோகினியும் முத்துவிடம் வாக்குவாதம் செய்ய, முத்துவும் விடாமல் வாக்குவாதம் செய்து கடைசியாக ரோகினி தனது வாயினால் க்ரிஷ் தனது பையன் என்று கூற வைத்துள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில் விஜயா தாலியை கழட்ட மனோஜிடம் கூறியுள்ளார். அதற்கு மனோஜ் இவளே வேண்டாம்... இவள் கழுத்தில் உள்ள தாலி எதற்கு? என்று கேட்டு தாலியை வேண்டாம் என்று கூறியுள்ளார்.
பின்பு மனோஜ் ரோகினியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளார். வெளியே சென்ற ரோகினி மீனாவிடம் உண்மையை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டு, முத்துவிடம் கூறி பழிவாங்கிட்ட என்று மீனாவைப் பற்றி உடைத்துள்ளார்.
இதனால் மீனாவிடம் ஒட்டுமொத்த குடும்பமும் கேள்வி எழுப்பி அவரை குற்றவாளியாக நிற்க வைத்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |