ரோகிணியை நெருங்கிய முத்து.. அவரே வாயை கொடுத்து மாட்டிய தருணம்
க்ரிஷுன் அம்மா ரோகிணி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரோகிணி நடந்து கொள்கிறார்.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாக கொண்டு நகர்த்தப்படும் இந்த சீரியலில், ரோகிணி எப்போது மாட்டுவார் என பலரும் எதிர்ப் பார்த்து வருகிறார்கள். இதுவே சிறகடிக்க ஆசை சீரியலின் கருவாக பார்க்கப்படுகிறது.
சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
வசமாக மாட்டிய ரோகிணி
இந்த நிலையில், முத்துவிற்கு க்ரிஷை கண்டுக்காமல் விட்டால் தன்னை போன்று ஆகி விடுவான் என்ற பயத்தில் அவனை பாதுகாப்பாக வளர்க்க போராடுகிறார்.
முத்து உடன் க்ரி்ஷ் இருந்தால் தான் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் ரோகிணி பல வேலைகளை பார்த்து வருகிறார்.
போர்டிங் பாடசாலையில் இருந்து க்ரிஷை அழைத்து வந்து மீனா வீட்டில் முத்து வைத்து வளர்க்கலாம் என திட்டம் போடுகிறார். அதனை உடைத்தெறியும் வகையில் ரோகிணி அம்மா வந்து க்ரிஷை தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
இதனால் மீனாவுக்கும் முத்துவிற்கு சந்தேகம் இன்னும் பலமாகிறது. தன்னுடைய பேரனை அழைக்க வந்த ரோகிணியின் அம்மா, “ முத்து மாதிரி ரௌடியாக வளர்ந்து விடுவான்..”எனக் கூறியதும் மீனாவிற்கும் முத்துவிற்கும் சந்தேகம் அதிகமாகிறது.
இதனை எப்படி ரோகிணி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |