Siragadikka Aasai: எல்லைமீறி சொத்து தகராறு! வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணாமலை
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை குடும்பத்தில் சொத்து தகராறு எல்லைமீறி சென்றதால் முத்து பயங்கர கோபத்தில் மனோஜை தாக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல சுவாரசியமான கதைகளங்களைக் கொண்டு செல்கின்றது. பெற்ற தாயே பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குகின்றார்.
வழக்கம் போன்று மாமியார் மருமகள் பிரச்சனையையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் மீனா முத்து இருவரும் அசால்டாக முடித்துவிடுகின்றனர்.

ரோகினி வாழ்க்கையில் நடந்த உண்மையை அறிந்த மீனா யாரிடமும் கூறமுடியாமல் தவித்து வருகின்றார். மனோஜ் வெளியில் கடன் வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து அண்ணாலையிடம் கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர்.
மேலும் மனோஜ் சொத்தை பிரிக்க வேண்டும் என்று வீட்டில் நெருக்கடி கொடுத்துள்ளார். ஆனால் முத்து இதற்கு சம்மதிக்காமல் போன நிலையில் மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது..
இந்நிலையில் அண்ணாமலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் முத்து தந்தையை காணாமல் பரிதவித்து வருகின்றார். விஜயாவும் தனது புருஷன் வீட்டிற்கு வரணும் என்று அழுது கொண்டிருக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |