கொத்தாக பொலிஸிடம் மாட்டிய ரோஹினி! சந்தேகத்தின் உச்சியில் முத்து - இனி நடக்கப் போவது என்ன?
ஏற்கனவே திருமணம் செய்து விட்டு அதனை மறைத்து முத்துவின் அண்ணனை ரோஹினி திருமணம் செய்து கொள்கிறார்.
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் குறும்புக்கார கதாநாயகனுடன் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.
மீனா திருமணம் செய்து கொள்ள முடியாது என ஓடி போன மனோஜ்ஜிற்கு தற்போது திருமணம் நடந்து கொண்டிருக்கின்றது.
மனோஜ்ஜிற்கு மனைவியாக வருபவர் தான் ரோஹினி என்கிற கல்யாணி, இவரின் உண்மையான முகம் இதுவரையில் யாருக்கும் தெரியாது.
கொத்தாக மாட்டிய ரோஹினி
இந்த நிலையில் ரோஹினியிடம் தப்பாக நடந்து கொள்ள வந்த நபரை ரோஹினி தரமாக வைத்து செய்துள்ளார்.
இதனால் கடுப்பான அந்நபர், ரோஹினியை எப்படியாவது பலி வாங்க வேண்டும் என அவர் பற்றி அனைத்து தகவல்களையும் திரட்டி ரோஹினியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என நினைத்து ரோஹினி - மனோஜ் திருமணத்தை நிறுத்துவதற்காக செல்கிறார்.
முத்துவின் காரில் சவாரிக்காக ஏறிய அந்நபரை முத்து சரமாறியாக தாக்கி அவரை நடுரோட்டில் விட்டு திருமணத்திற்கு வந்துள்ளார்.
முத்துவை தேடி பொலிஸார் வீட்டிற்கு வந்துள்ளார்கள். விசாரணைசெய்து கொண்டிருக்கும் போது அந்நபர் பேசிய கடைசி போன் நம்பரை கண்டுபிடித்துள்ளார்கள்.
அது ரோஹினியின் நம்பர் எனவும் பொலிஸ் கண்டுபிடித்து விட்டது. இதனை தொடர்ந்து சீரியலில் என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |