Siragadikka Aasai: வீட்டைவிட்டு வெளியேறிய முத்து! அண்ணாமலை எடுத்த விபரீத முடிவு
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவை அண்ணாமலை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது போன்று படப்பிடிப்பு காணொளி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.
முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இளையமகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு மூத்த மகன் முத்துவை பிடிக்காமல் போயுள்ளது.
இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.
முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.
வீட்டைவிட்டு வெளியேறினாரா முத்து
முத்து, அப்பாவிற்கு நல்ல பிள்ளையாக இருந்து வரும் நிலையில், தற்போது மீனாவின் தம்பி சத்யாவின் நண்பன் செய்த சதியால் தலைகீழாக மாறியுள்ளது.
மேலும் முத்துவின் தம்பி மனைவி சுருதியின் தந்தைக்கும் முத்துவை பிடிக்காமல் உள்ள நிலையில், அவரும் முத்துவை பழிவாங்க சதி செய்துள்ளார்.
முத்துவின் காரை பொலிசார் கைப்பற்றிய நிலையில், வண்டியை மீட்க முத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றார். இந்நிலையில் முத்துவும், மீனாவும் புதிய வீட்டில் தங்கியிருப்பது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அண்ணாமலை முத்துவையும், மீனாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |