Siragadikka Aasai: மனோஜிற்கு அழகாக பாடமெடுத்த முத்து! பிரமிப்பில் விஜயாவின்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் பள்ளிக்கூடம் ஒன்றில் பேசுவதற்கு அழைத்ததால் அதற்கான பயிற்சியினை எடுத்து வந்த நிலையில், முத்து அவருக்கு கற்றுக்கொடுத்த காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலிலுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், முத்து மற்றும் மீனாவின் நடிப்பு அட்டகாசம் என்று தான் கூற வேண்டும்.
அம்மாவிற்கு பிடித்த பிள்ளையாக மனோஜும், பிடிக்காத பிள்ளையாக முத்துவும் இருக்கின்றனர். இந்நிலையில் பள்ளி ஒன்றில் பேசுவதற்காக மனோஜை அழைத்துள்ளனர்.
அவர் ஆங்கிலத்தில் பேசி வீட்டிலுள்ளவர்களை கடுப்பாக்கி வந்த நிலையில், அவர் பேச்சைக் கேட்டு தெருவில் இருந்த நாய் வீட்டின் முன்பு வந்து குரைத்து தனது கோபத்தை காட்டியுள்ளது.
இந்நிலையில் முத்துவை பேச கூறியுள்ளார் மனோஜ். உடனே முத்து தனது பாணியில் பேச ஆரம்பித்துள்ளார்.
அதில் அப்ப அம்மா எல்லா நேரத்திலேயும் மறக்க கூடாது என்றும் அவர்களை கடைசிவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.
முத்துவின் இந்த பேச்சைக் கேட்ட விஜயா தனது பாசத்தை கண்ணில் காட்டியதுடன் பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
