Siragadikka Aasai: கடைசி நொடியில் சத்யாவைக் காப்பாற்றிய முத்து... சீதா மீது எழுந்த சந்தேகம்
சிறகடிக்க ஆசை சீரியலில் சிட்டியிடமிருந்து கடைசி நொடியில் சத்யாவை முத்து காப்பாற்றியுள்ள காட்சி அரங்கேறியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைத்து வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் மலேசியா மாமா உண்மை பூதாகரமாக வெடித்துள்ளது.
பணக்கார மருமகள் என்று ரோகினியை கொண்டாடி வந்த விஜயா, தற்போது பயங்கரமாக கொடுமைபடுத்துகின்றார். தற்போது சிட்டியின் கதை செல்கின்றது.
சத்யா முதலில் சிட்டியிடம் சேர்ந்து வேலை செய்துவந்த நிலையில், முத்துவையும் எதிர்த்தார். நாளடைவில் சிட்டியின் சுயரூபம் தெரிந்த பின்பு முத்துவின் குணத்தை தெரிந்து கொண்டு திருந்தி வாழ்ந்து வருகின்றார்.
நாளைய தினத்தில் பரிட்சை உள்ள நிலையில், சிட்டி சத்யாவை கடத்தியுள்ளார். பின்பு முத்து மற்றும் மீனா இருவரும் தேடிய நிலையில், சீதா தனது காதலரிடமிருந்து சத்யாவின் லொகோஷனை வாங்கி அனுப்பியுள்ளார்.
கடைசி நொடியில் முத்து சத்யாவைக் காப்பாற்றி கொண்டு வந்துள்ளார். ஆனால் சீதாவிற்கு எப்படி இந்த லொக்கேஷன் கிடைத்தது என்று முத்து மற்றும் மீனா இருவரும் சந்தேகம் அடைந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |