Siragadikka Aasai: மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்பான பாட்டி! தீவிரமாக தேடும் முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷின் பாட்டி மருத்துவமனையிலிருந்து சென்ற நிலையில், முத்து தீவிரமாக அவரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், க்ரிஷின் பாட்டியை மருத்துவமனையிலிருந்து ரோகினி டிஸ்சார்ச் செய்துள்ளார்.
க்ரிஷ் விடயத்தில் அனைத்தும் மர்மமாகவே இருக்கின்றது என்று முத்து மீனா பேசிக் கொள்கின்றனர். ஆம் க்ரிஷின் பாட்டி மருத்துவமனையில் இருப்பதால், க்ரிஷ் மீனா முத்துவுடன் இருக்கின்றார்.
க்ரிஷும் தனது தாய் ரோகினி இருக்கும் இடத்தில் தானும் இருப்பதால் இங்கிருந்து போக மறுக்கின்றார். இந்நிலையில் பாட்டியின் உடல்நிலை சரியான நிலையில், ரோகினி இரவோடு இரவாக அவரை டிஸ்சார்ட் செய்துள்ளார்.
இதனை அறியாத முத்து மருத்துவமனையில் வந்து தேடுகின்றார். மேலும் தீவிரமாக க்ரிஷின் பாட்டி, அம்மா இருவரையும் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றார்.
மற்றொரு புறம் வீட்டில் க்ரிஷ் இருப்பதை பிடிக்காத விஜயா, மனோஜ் இருவரும் சிறுவனை திட்டித்தீர்த்து வருகின்றனர். ரோகினி விரைவில் முத்துவிடம் சிக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |