Siragadikka Aasai: முற்றிய மீனா முத்து சண்டை... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விஜயா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுவதுடன், மீனாவை கடுப்பேற்றும் விதமாகவும் பேசிவருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. கடந்த வாரத்தில் மகிழ்ச்சியாக இருந்த முத்து மீனா இருவருக்கும் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மீனாவின் தம்பி சத்யாவின் பிறந்தநாள் கோவிலுக்கு கூழ் ஊற்றுவதற்கு, முத்துவிற்கு தெரியாமல் சென்ற மீனா, தற்போது விஜயாவால் அவரிடம் மாட்டிக் கொள்கின்றார்.
இதனால் கோபத்தில் முத்து மீண்டும் குடிப்பழக்கத்திற்கு சென்றதுடன், அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
மீனாவிடம் கடுமையான வாக்குவாதத்தினையும் விஜயா பார்த்துக் கொண்டிருக்கின்றார். கடைசியில் மீனாவை வன்மத்துடன் இழிவாக பேசியுள்ளார்.
தான் இன்னும் எதிர்பார்த்ததாகவும், அதைவிட குறைவாகத்தான் சண்டை நடந்துள்ளது. தற்போது அல்வா சாப்பிடனும் போன்று இருப்பதாகவும் கூறி கடுப்பேற்றியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |