Siragadikka Aasai: ஸ்ருதி நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டை... பிரியப்போகின்றதா குடும்பம்?
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி திருமண நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில், தற்போது ஸ்ருதி காணாமல் போயுள்ளது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ரோகினியின் ரகசியத்தை கண்டுபிடிப்பதற்கு முத்து, அடுத்தடுத்து பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், மொபைல் போன் ரகசியமும் முத்துவிற்கு தெரியவந்துள்ளது.
வித்யாவிடம் போன் குறித்து கேட்ட பொழுது அவர் சாமர்த்தியமாக வேறு பதில் கூறி தப்பித்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதி தனது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட உள்ளனர்.
இதற்காக பத்திரிக்கை அடித்து வீட்டில் அனைவரையும் அழைத்துள்ளனர். இதன் போது ஸ்ருதி வீட்டிலிருந்து காணாமல் சென்றுள்ளது போன்று கதை காட்டப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |